தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு.. டிச.8க்குள் விசாரணை பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு! - IG Pramod Kumar

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில், சாட்சி விசாரணைக்கான பட்டியலை வருகிற டிசம்பர் 8ஆம் தேதி தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டு உள்ளார்.

கோயம்பத்தூர்
கோயம்பத்தூர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 9:54 PM IST

கோவை: திருப்பூர் பாசி நிதி நிறுவன பெண் இயக்குநர் கமலவள்ளியை கடத்தி, 2 கோடியே 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக ஐஜி பிரமோத் குமார் உட்பட ஐந்து பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல் இருந்தது.

இந்த வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஐஜி பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று (நவம்பர் 28) மாலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஐஜி பிரமோத்குமார், டிஎஸ்பி ராஜேந்திரன், ஆய்வாளர் மோகன்ராஜ், இடைத்தரகர்கள் ஜான் பிரபாகரன், செந்தில்குமார் ஆகிய ஐந்து பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சாட்சி விசாரணைக்கான பட்டியலை வருகிற டிசம்பர் 8ஆம் தேதி தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:நிதி நிறுவன இயக்குநரிடம் பணம் பறித்த புகார்..! முன்னாள் ஐ.ஜி., சிபிஐ கோர்டில் ஆஜர்!

ABOUT THE AUTHOR

...view details