தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார் நாகராஜிடம் சிபிஐ ரகசிய இடத்தில் விசாரணை! - பொள்ளாச்சி பாலியல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பார் நாகராஜிடம் சிபிஐ அலுவலர்கள் ரகசிய இடத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

பார் நாகராஜ்

By

Published : May 8, 2019, 2:57 PM IST

பொள்ளாச்சியைச் சேர்ந்த கும்பல் ஒன்று ஏராளமான இளம் பெண்களுடன் நட்பாகப் பழகி, ஏமாற்றி ஆபாசமாக படம்பிடித்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வந்ததை அடுத்து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐ வசம் மாற்றப்பட்டது.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கிலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கிலும் பிணையில் உள்ள பார் நாகராஜிடம் சிபிஐ அலுவலர்கள் காலை 10:30 மணி முதல் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details