கோவை மாவட்டம் அன்னூர் அவிநாசி சாலையில் கத்தோலிக் சிரியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு அருகிலேயே ஏடிஎம் மையமும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வழக்கம்போல் வங்கி பணி முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு நேற்று (வியாழக்கிழமை) சென்றுள்ளனர். இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் வங்கியில் இருந்து அபாய ஒலி வந்துள்ளது. இதனைக் கேட்ட அருகிலிருந்தவர்கள் அன்னூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், வங்கி ஊழியர்கள் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது வங்கியின் பின்புற ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது.