தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ரூ. 3 லட்சம் லஞ்சம் கேட்ட வங்கி அலுவலர் - திட்டமிட்டு கைது செய்த சிபிஐ! - Bank official arrested for soliciting Rs 3 lakh bribe in Chennai

சென்னை: வங்கிக் கடனை ஒரே தவணையில் திருப்பி செலுத்த அனுமதி வழங்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட தனியார் வங்கி அலுவலரை சிபிஐ அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.

http://10.10.50.85:6060/reg-lowres/19-February-2021/tn-che-01a-cbiarrest-vis-7202290_19022021120808_1902f_1613716688_1045.mp4
Bank official arrested for asking for bribe

By

Published : Feb 19, 2021, 4:50 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவன்த் விஷ்வேஷ்வரன். இவர் பிரபல தனியார் வங்கியின் சென்னை கிளை ஒன்றில் (standard chartered bank ) தனது சொந்த தேவைக்காக கடன் வாங்கியுள்ளார். அசல், வட்டியை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்த அவர், கடன் தொகையிலிருந்து ஒரே தவணையாக தன்னால் இயன்ற கடனை திருப்பிப்செலுத்த வங்கி தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளார்.

தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை ஸ்ரீவன்த் விஷ்வேஷ்வரன் சாதகமாகவும், ஒரே நேரத்தில் அவரால் இயன்ற தொகையை செலுத்துவதற்கு அனுமதி வழங்கவும் 3 லட்சம் ரூபாய் வழங்கவேண்டுமென அந்த கிளையின் அலுவலர் ராஜேந்திரன் என்பவர் ஸ்ரீவன்த்திடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீவன்த் சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார்.

இதையடுத்து, ராஜேந்திரனை கையும் களவுமாக பிடிக்க சிபிஐ அலுவலர்கள் திட்டமிட்டனர். அதன்படி, லஞ்ச தொகையயை பெற்றுக் கொள்வதற்கு இன்று (பிப்.18) கோயம்பேட்டில் உள்ள தனியார் கிளப்பிற்கு ராஜேந்திரனை வரவழைத்தனர். அங்கு வந்த அவர் ஸ்ரீவன்த்திடம் லஞ்சப்பணத்தை பெறும்போது சிபிஐ அலுவலர்கள் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட வங்கி அலுவலர் ராஜேந்திரனை எழும்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:லஞ்சம் பெற்ற அரசு அலுவலர் பணியிடை நீக்கம் - வைரல் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details