தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் - coimbatore district news

பொதுத் துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழியர்கள் போராட்டம்
ஊழியர்கள் போராட்டம்

By

Published : Dec 16, 2021, 12:31 PM IST

மத்திய அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக அரசு வங்கி ஊழியர்கள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுவருகிறது. இதனிடையே இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

அதன்படி கோவையில் இன்று (டிசம்பர் 16) அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்துப் பேசிய கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள், "மத்திய அரசு எந்த ஆலோசனையும் மேற்கொள்ளாமல் புதிய முடிவை எடுத்திருக்கிறது. பொதுத் துறை வங்கிகளின் பங்குகளைக் குறைப்பதற்காக இந்த அரசு முயன்றுவருகிறது. சர்வாதிகார அரசாக இவ்வரசு செயல்படுகிறது.

நிர்மலா சீதாராமன் இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று கூறி அதனை ரகசியமாக வைத்துள்ளார். இந்தப் போராட்டத்தின் மூலம் எட்டு ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். கோவையைப் பொறுத்தவரை 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக் கூடும். 5000 ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சுருக்குமடி வலை எதிர்ப்பு மீனவர்கள் போராட்டம் வாபஸ்!

ABOUT THE AUTHOR

...view details