தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்ப்பிணிக்கு ஆட்டோவிலேயே பிரசவம் - தாயும் சேயும் நலம்! - கர்ப்பிணிக்கு ஆட்டோவில் பிரசவம்

கோவை: பொள்ளாச்சி அருகே பிரசவத்திற்காக சென்ற கர்ப்பிணி பெண்ணிற்கு, ஆட்டோவிலேயே ஆண் குழந்தை பிறந்தது, தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

baby-birth-in-auto
baby-birth-in-auto

By

Published : Aug 19, 2020, 7:51 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த திப்பபட்டி கொள்ளுபாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களுடன் ரஜினி என்பவர் மனைவி சினேகாவுடன் வசித்துவருகிறார். நிறைமாத கர்ப்பிணியான ரஜினியின் மனைவிக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல ரஜினி ஆட்டோவுடன் வந்தார். பின்னர் ஆட்டோவில் ஏற்றி அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்திற்குள் செல்வதற்கு முன்னதாகவே ரஜினி மனைவி சினேகாவுக்கு பிரசவலி அதிகரித்தது. இதன் காரணமாக, அங்கிருந்த செவிலியர்கள் ஆட்டோவில் வைத்தே சினேகாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
கர்ப்பிணிக்கு ஆட்டோவிலேயே பிரசவம்

இதில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும்-சேயும் மருத்துவமனையில் நலமுடன் உள்ளனர்.

இதையும் படிங்க:உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடலுக்கு டிஜிபி தலைமையில் காவலர்கள் மரியாதை!

ABOUT THE AUTHOR

...view details