கோயம்புத்தூர்: உடுமலைப்பேட்டையில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் சாமிநாதன் வந்தார்.
அப்போது ஆழியாறு பாசனத் திட்டம் துவங்க முக்கிய காரணமாக இருந்த காமராஜரின் புகைப்படம் வைக்கப்படவில்லை என்று கூறி தாமகாவினர் முழக்கமிட்டனர்.இதையடுத்து தமாகா முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் உள்ளிட்ட 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் அமைய முக்கிய காரணமாக இருந்த காமராஜர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிசாமி, பாரத ரத்னா சி.சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் பத்மபூஷன் டாக்டர்.கே.எல்.ராவ் ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் சாமிநாதன் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.