தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலைப் பாதுகாப்பு வாரவிழா: 500 மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

கோவை: சாலைப் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி கல்லூரி மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

By

Published : Jan 21, 2020, 2:21 PM IST

rally
rally

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஆண்டுதோறும் சாலைப் பாதுகாப்பு வாரவிழா நடத்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான 11ஆவது சாலைப் பாதுகாப்பு வாரவிழா நேற்று தொடங்கி 27ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

சாலைப் பாதுகாப்பு வாரவிழாவின் முதல்நாளான நேற்று, இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள், பெண்கள், காவல் துறையினர் இணைந்து இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.

சாலை பாதுகாப்பு குறித்த மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராமகிருஷ்ணா கலை கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நடை பேரணியை நடத்தினர். இந்த பேரணியை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணி வஉசி மைதானம் தொடங்கி அண்ணா சாலை வழியாக சென்று இறுதியாக வஉசி மைதானத்தை வந்தடைந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

அடுத்தடுத்த நாள்களில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாலைப் பாதுகாப்பு குறித்து அமலாக்கப் பணி, விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கவுள்ளது.

இதையும் படிங்க: சாலைப் பாதுகாப்பு வார விழா: தலைக்கவசம் அணிந்து வாகன விழிப்புணர்வுப் பேரணி

ABOUT THE AUTHOR

...view details