தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான்...கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்பி - கோயம்புத்தூரில் காவலர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான்

கோயம்புத்தூரில் காவலர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

மாரதான்
மாரதான்

By

Published : Jan 29, 2022, 10:09 AM IST

கோயம்புத்தூர்: மாநில காவல் துறை இயக்குநர் உத்தரவின்பேரில், தமிழ்நாடு முழுவதும், காவலர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கரோனா விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோயம்புத்தூரில் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி ஈச்சனாரி பகுதியில் நடைபெற்றது.

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஈச்சனாரியில் இருந்து மதுக்கரை வரை சுமார் பத்து கிலோமீட்டர் மாரத்தான் நடைபெற்றது.

மாரதான்

இப்போட்டி ஆண் காவலர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், பெண் காவலர்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் என 2 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் சுமார் 45 பெண் காவலர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட ஆண் காவலர்கள் கலந்து கொண்டனர்.

மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம், இந்த மாரத்தானில் ஓடினார். முதல் மூன்று இடங்களை பிடித்த காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: தரிசனத்திற்கு அனுமதி; காஞ்சி காமாட்சி கோயில்களில் குவிந்த பக்தர்கள்

ABOUT THE AUTHOR

...view details