கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஜீவானந்தம். இவர், தனது குடும்பத்துடன் இன்று (டிச.25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று தீக்குளிக்க முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் அவர்களை தடுத்து, அவர்கள் மேல் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் ஜீவானந்தத்தின் குடும்பத்தாரை, விசாரணைக்காக பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், ஜீவானந்தத்தின் நிலத்தை, பாஜகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாகவும், தொடர்ந்து ஜீவானந்தத்தின் குடும்பத்தினரை மிரட்டி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.