தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசைக் கவிழ்க்க சதி செய்த ஆட்டோ ஓட்டுநர்? - நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு - தமிழக அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக கூறி ஆட்டோ ஓட்டுநர் கைது

கோவை: கருமத்தம்பட்டியில் தமிழ்நாடு அரசைக் கவிழ்க்க சதி செய்ததாகக் கூறி ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் கூறி அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுத்துவிட்டார்.

தமிழக அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக கூறி ஆட்டோ ஓட்டுநர் கைது: போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறி நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு

By

Published : Sep 21, 2019, 6:55 PM IST

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். ஆட்டோ ஓட்டுநரான இவர் அங்குள்ள பாலத்தின் அடியில் நின்று கொண்டிருந்தபோது ரோந்து சென்ற காவல் துறையினர் பூபாலனைச் சந்தேகத்தின்பேரில் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் தமிழ்நாடு அரசை கவிழ்ப்பதற்கு சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது எனக் கூறப்படுகிறது.

தமிழக அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக கூறி ஆட்டோ ஓட்டுநர் கைது: போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறி நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்டோ ஓட்டுநர் பூபாலனை கருமத்தம்பட்டி காவல் துறையினர் சூலூர் நீதிபதி வீட்டில் இரவு ஆஜர்படுத்தினர். முதல் தகவல் அறிக்கையில் பூபாலனை கைது செய்வதற்கான முகாந்திரம் எதுவும் இல்லாததால் அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை விடுவித்தனர்.

இதையும் படிங்க:"பிற மொழி பேசும் நீதிபதிகளை தமிழ்நாடு நீதிமன்றங்களில் நியமிக்கக் கூடாது"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details