கோவை: துடியலூர் காவல் நிலையம் அருகே நேற்றிரவு மது போதையில் அதிவேகமாக வந்த ஆட்டோ பள்ளி மாணவி உட்பட 3 பேர் மீது மோதியது. மேலும் ஆட்டோவும் அருகில் இருந்த கழிவு நீர் குட்டையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நடந்து சென்ற மாணவி உட்பட 3 பேர் சாக்கடையில் விழுந்தனர்.
ஆட்டோ ஓட்டுனரும் அதே சாக்கடையில் விழுந்தார். இதை கண்ட பொதுமக்கள் 4 பேரையும் மீட்டனர். உடனடியாக அருகில் இருந்த போலீசார் படுகாயமடைந்த மூவரையும் உடனடியாக 108 ஆம்புலன்ஸில் கோவை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
பின்னர் ஆட்டோ ஓட்டுனரை காவல் நிலையம் அழைத்து சென்று குளிக்க வைத்து மாற்று உடை கொடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணயில் ஆட்டோவை ஓட்டிவந்தவர் தொப்பம்பட்டியையை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், இவர் சொந்தமாக ஆட்டோ ஒன்றை விலைக்கு வாங்கி தொழில் தொடங்குவதற்காக ஓட்டி வந்ததும், ஆட்டோவை வாங்கி வரும்போது மது அருந்திவிட்டு போதையில் அதிவேகமாக வந்ததும் தெரியவந்தது.
மதுபோதையில் ஆட்டோ ஓட்டி போலிசாரை டென்ஷனாக்கிய ஓட்டினர்!! இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் குடித்துள்ளாரா என்பதை உறுதி செய்ய மது அருந்தியதை கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தனர். ஆனால் அவர், அந்த கருவியை வாயில் வைக்கும்போது ஊதுவது போல் நடித்துள்ளார். இதில் கோபமடைந்த காவலர்கள் ஒரு வழியாக அந்த சோதனையை எடுத்து முடித்தனர். இதனையடுத்து மோகன் ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: JEE தேர்வில் முதலிடம் பிடித்த கோவை மாணவிக்கு பாராட்டு விழா