தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 22, 2022, 10:14 PM IST

ETV Bharat / state

Audio Leak: அலுமினிய ஆலை அமைப்பதற்கு பேரம் பேசிய கவுன்சிலர் - அதிர்ச்சியில் கிராம மக்கள்

சூலூர் அருகே அலுமினிய ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், வார்டு கவுன்சிலர் ஒருவர் அலுமினிய ஆலைக்கு ஆதரவாக பேரம் பேசும் ஆடியோ வெளியாகி கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பேரம் பேசிய கவுன்சிலர்
பேரம் பேசிய கவுன்சிலர்

கோயம்புத்தூர்:சூலூர் அடுத்த கரவளி மாதப்பூர் கிராமப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் தனியார் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப்பகுதிகள் அதிகம் உள்ள பகுதியில் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து கிராம மக்கள் கடந்த 14ஆம் தேதி மாதப்பூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆலைக்கு எதிராக ஊராட்சிமன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமென, ஊராட்சி நிர்வாகம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் பாலநாகம்மாள் மற்றும் அவரது கணவர் ஆகியோர், மக்கள் எதிர்ப்புத்தெரிவிக்கும் ஆலையை செயல்படுத்துவதற்கு 5 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பேரம் பேசிய கவுன்சிலர்

இதையடுத்து அலுமினிய ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள், ஆலைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'இப்பகுதியில் அலுமினிய ஆலை செயல்படத் தொடங்கினால் நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்படுவதுடன், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

அலுமினிய ஆலைக்கு எதிராக ஊராட்சிமன்றத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் தற்போது பேரம் பேசிய ஆடியோ வெளியாகி இருப்பது ஊராட்சி நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அலுமினிய ஆலை இப்பகுதிக்கு வருவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:Audio Leak: போலீஸ் ரைடு வருது... காவல் துறையில் ஒரு கறுப்பு ஆடு...

ABOUT THE AUTHOR

...view details