தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்திக்கடவு நீரேற்று நிலைய பூமி பூஜை; சிறப்பித்த சட்டப்பேரவை சபாநாயகர் - கோயம்புத்தூர் செய்திகள்

கோயம்புத்தூர்: அன்னூரில் அத்திக்கடவுத் திட்டத்திற்கான நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜைக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கலந்து கொண்டு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார்.

சபாநாயகர் தனபால்
சபாநாயகர் தனபால்

By

Published : Jun 16, 2020, 8:01 PM IST

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் குளம், குட்டைகளில் நீர் நிரப்பி, விவசாயத்தை மேம்படுத்த அவிநாசி - அத்திக்கடவுத் திட்டம் தமிழ்நாடு அரசால் 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதற்காக காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து அன்னூர் வரை குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 1.5 டி.எம்.சி தண்ணீரைக் கொண்டு வந்து குளங்கள், குட்டைகள், ஏரிகளில் நீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டத்தில் பயன்பெறும் அன்னூர் பகுதியில் இன்று (ஜூன் 16) அவிநாசி அத்திக்கடவுத் திட்ட நீரேற்று நிலையம் அமைப்பதற்கான, பூமி பூஜை குன்னத்தூரம்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகரும்; அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினருமான தனபால் கலந்துகொண்டு பூமி பூஜையைத் தொடங்கி வைத்தார்.

அன்னூர் மக்களின் கனவுத்திட்டமான அவிநாசி - அத்திக்கடவுத் திட்டம் தொடக்க நிகழ்ச்சி, இப்பகுதியில் நடைபெற்றாலும் கரோனா அச்சம் காரணமாக பெரிய அளவில் கூட்டம் கூடாமல் எளிய முறையில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்றது.

இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும் போது கோயம்புத்தூர் பகுதியில் மட்டும் 258 குளங்கள், குட்டைகள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details