கோவை காட்டூர் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் இக்பால், நிர்வாகி ஷாஜகான் ஆகியோர் டீ குடிப்பதற்காக கடைக்கு சென்றனர். அப்போது அவர்களது எதிரே வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கம்பியால் இக்பாலை தாக்கினர்.
இதைப் பார்த்த ஷாஜகான் தடுக்க சென்றபோது அவரையும் அந்த நபர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றனர். இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் தரையில் விழுந்து கிடந்தனர்.