கோயம்புத்தூர்:கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த செப்டம்பர் 2021ஆம் ஆண்டு முத்துமுடி பகுதியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பிடிக்கப்பட்ட ஆண் புலியை வனத்துறையினர் கடந்த 9 மாதங்களாக மானாம்பள்ளியில் வைத்து பராமரித்து வந்தனர். தற்போது அந்தப் புலி நலம் பெற்றதையடுத்து தமிழ்நாடு வனத்துறை சார்பில், அதற்காக ரூபாய் 75 லட்சம் செலவில் புதிய கூடாரம் அமைக்கப்பட்டது.
வால்பாறையில் ஆண் புலிக்கு ரூ.75 லட்சம் செலவில் பிரமாண்ட கூடாரம்! - வால்பாறையில் புலிக்கு 75 லட்சம் செலவில் புதிய கூண்டு
கோவை மாவட்டம், வால்பாறையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த ஆண் புலிக்கு ரூ.75 லட்சம் செலவில் புதிய கூடாரம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
![வால்பாறையில் ஆண் புலிக்கு ரூ.75 லட்சம் செலவில் பிரமாண்ட கூடாரம்! வால்பாறையில் ஆண் புலிக்கு ரூ.75 லட்சம் செலவில் புதிய கூராடம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15482353-thumbnail-3x2-tiger.jpg)
வால்பாறையில் ஆண் புலிக்கு ரூ.75 லட்சம் செலவில் புதிய கூராடம்
இன்று (ஜூன் 5) வனத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் அடங்கிய குழு புலிக்கு மயக்க மருந்து செலுத்தி பிடித்து புதிய கூடாரத்தில் கொண்டு வந்து விட்டனர். அந்த புதிய கூடாரத்தில் கூண்டு, தண்ணீர் தொட்டி, படுக்கை, மரக் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. சிறு குட்டியான ஆண் புலி தற்போது 144 கிலோ எடை உள்ளது.
வால்பாறையில் ஆண் புலிக்கு ரூ.75 லட்சம் செலவில் புதிய கூடாரம்
இதையும் படிங்க: வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி தாக்கி ஊழியர் காயம்!
Last Updated : Jun 6, 2022, 6:22 AM IST