கோவையில் மதுக்கரை, சவுரிப்பாளையம் பகுதிகளில் நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவையில் நோய் எதிர்ப்பு மருந்துகளை அமைச்சர் வேலுமணி வழங்கினார்! - கோவை நோய் எதிர்ப்பு மருந்து வழங்கல்
கோவை: மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கும் விழாவில் அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு நோய் எதிர்ப்பு மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
minister velumani
இதில் அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டு மக்களுக்கு கபசுரக் குடிநீர், வைட்டமின் மாத்திரை, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வேலுமணி, "மக்கள் அனைவரும் அரசு கூறுவதை ஏற்று நடந்தால் கரோனாவை எதிர்க்கொள்ளலாம். அனைவரும் முகக் கவசம் அணியுங்கள், வெளியே சென்று வந்தால் கட்டாயமாக கை, கால்களை தூய்மைப் படுத்தி கொள்ளுங்கள், கட்டாயம் தகுந்த இடைவெளியை பின்பற்றுங்கள்.
முகக்கவசம் அணியாமல் யாரும் வெளியில் வர வேண்டாம், முகக்கவசம் அணியாத நபர்களிடம் யாரும் பேச வேண்டாம். மேலும் கோவையில் 11 இடங்களில் இன்று முதல் இந்த கரோனா தடுப்பு மருந்துகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது " எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'கல்வியில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது' - அமைச்சர் செங்கோட்டையன்