தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா விற்ற பெண் உட்பட ஏழு பேர் கைது! - kovai latest crime news

கோவை: கஞ்சா விற்ற ஒரு பெண் உட்பட ஏழு பேரை கோவை மாநகராட்சி, புறநகர் பகுதியைச் சேர்ந்த காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கஞ்சா விற்றவர்கள் கைது
கஞ்சா விற்றவர்கள் கைது

By

Published : Jan 21, 2020, 10:13 PM IST

கோவை மாநகரம், மாவட்ட காவல் துறையினர் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை பிடிக்க நேற்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்தனர்.

இதில், மாநகர காவல் துறைக்குட்பட்ட காந்திபுரம் காட்டூர் காவல் துறையினர் புதுசித்தாப்புதூர் அருகே கஞ்சா விற்ற சேரன் நகரைச் சேர்ந்த சக்திவேல் (25) என்பவரையும், ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் சுண்டபாளையம் சாலையில் கஞ்சா விற்ற இடையர்பாளையத்தைச் சேர்ந்த முருகபூபதி (31) என்பவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து ஆயிரத்து 700 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்றவர் கைது

அதைத் தொடர்ந்து கோவை மாவட்ட காவல் துறைக்குட்பட்ட வடவள்ளி காவல் துறையினர், மருதமலை சாலையில் கஞ்சா விற்ற மருதமலையைச் சேர்ந்த கோவிந்தன் (49), கல்வீரம்பாளையத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் (30), தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த பிரவீன் (20), கோவிந்தன் மனைவி ஜோதி (32) ஆகிய நான்கு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ஆயிரத்து 200 கிராம் கஞ்சா, ரூ.200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் பெட்டதாபுரம் அருகே கஞ்சா விற்ற காரமடையைச் சேர்ந்த மனோஜ் (19) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா, ரூ.200 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவையி காவல்நிலையங்கள்

இதையும் படியுங்க: கோவை வெள்ளிங்கிரி மலையில் கஞ்சா - நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

ABOUT THE AUTHOR

...view details