கோயம்புத்தூர்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாஜக-வில் இணைந்தார். இதனிடையே அவர் மீண்டும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார்.
இதனிடையே கோவையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். கோவை டவுன்ஹால் அருகே உள்ள தனியார் ஹாலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அக்கட்சியின் துணைத் தலைவர் தங்கவேலு, மாநில செயலாளர்கள் மயில்சாமி, மூகாம்பிகா ரத்தினம், அனுஷா ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இரண்டு வருட வனவாசத்திற்கு பிறகு தாய்க்கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு தாயுள்ளத்தோடு நம்மவர் என்னை அரவணைத்து ஏற்றுக் கொண்டார்.