தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மான் வேட்டையில் ஈடுபட்டவர்கள் கைது - arrested

கோவை : பொள்ளாச்சியில் மான் வேட்டையில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை வனத்துறையினர் கைது செய்தனர்.

மான் வேட்டையில் ஈடுபட்டவர்கள் கைது

By

Published : May 25, 2019, 7:42 AM IST

பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி , செம்மேடு பகுதிகளில் சிலர் மான் வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து , பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர் , இதில் 5ஆம் தேதி பாலகிருஷ்ணன் , சுந்தர்ராஜ் ,பிரகாஷ், துரைசாமி ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கில் மாரப்பகவுண்டன்புதூரை சேர்ந்த தமிழரசன்(47) என்பவர் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில் , வனத்துறையினர் வெள்ளிக்கிழமையன்று தமிழரசனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வேட்டையில் தொடர்புடையை கணேசன்(35), காளிமுத்து(எ)கனகராஜ்(55) ஆகியோரையும் கைது செய்தனர்.

மான் வேட்டையில் ஈடுபட்டவர்கள் கைது

இது குறித்து வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், மான், முயல், காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை ஒரு கிலோ ஒன்று ரூ.1000 முதல் 1500 வரை விற்பனை செய்துள்ளனர். கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் அதனை வாங்கியுள்ளனர். அவர்களது, முகவரிகளையும், சேகரித்து வருகிறோம் விரைவில் அவர்களையும் கைது செய்யவுள்ளோம். இதில் தமிழரசன் என்பவர் ஏற்கனவே யானை தந்தத்தை வேட்டையாடிதற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details