தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 21, 2020, 4:34 PM IST

ETV Bharat / state

கோவையில் தடையை மீறி விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடுகள்

கோவை: பொது இடங்களில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைக்க அரசு தடை வித்திருக்கும் நிலையில், குளங்களில் சிலைகளைக் கரைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ganesh idols
ganesh idols

நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 22)விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அப்போது, பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்கிடையே, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலான தளர்வுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

இதனால் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவோ, ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ கூடாது எனத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அவரவர் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உயர்நீதிமன்றமும் அரசு உத்தரவை மதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தடையை மீறி மூன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. அதில், விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி ஊர்வலம் செல்ல முற்படுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்து அமைப்புகள் தடையை மீறி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்படும் எனத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படாது என்று அனைவரும் எண்ணிய நிலையில், தற்போது கோவை குனியமுத்தூர், குறிச்சி குளம், முத்தணன் குளம் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலை கரைக்கக் குளங்கள் அருகே தடுப்புகள் போடப்பட்டு, மின் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவோ, ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ கூடாது எனத் தமிழ்நாடு அரசு தடை அறிவித்திருக்கும் நிலையில், இந்த ஏற்பாடுகள் எதற்காக, விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடைபெறுமோ? என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


இதையும் படிங்க:அனுமதியின்றி விநாயகர் சிலை வைக்க முயன்றவர்கள் சிறைப்பிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details