கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வனச்சரகம் நவமலை வனப்பகுதியில் அரிசி ராஜா யானை தாக்கியதில் முதியவர், சிறுமி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் வனத்துறை ஊழியர் உட்பட சிலர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து அர்த்தனாரிபாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அரிசி ராஜா யானையைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கும்கி யானைகள் உதவியுடன் கடந்த 2019 நவம்பர் 14ஆம் தேதி அரிசி ராஜா யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.