தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆப்வியூஎக்ஸ் மூலம் 600-க்கு மேற்பட்டோருக்கு வேலை வழங்கத் திட்டம் - ஆனந்த புருஷோத்தமன் - coimbatore district news in tamil

கோவை: சர்வதேச அளவில் லோ காஸ்ட் நெட்ஒர்க் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தின் நிறுவனமான ஆப்வியூஎக்ஸ் கோவை, சென்னை,பெங்களூரு நகரங்களில் விரிவாக்கம் செய்யவுள்ளதாக ஆனந்த புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்

Appviewx employment
Appviewx employment

By

Published : Jan 8, 2020, 9:03 AM IST

இந்திய தொழில்நுட்ப முனைவர் ஆனந்த புருஷோத்தமன், 2015ஆம் ஆண்டு ஆப்வியூஎக்ஸ் என்னும் ஐடி ஆட்டோமேஷன் நிறுவனத்தை தொடங்கிவைத்தார். இந்த ஆப்வியூஎக்ஸ் நிதிநிறுவனங்கள், சில்லறை விற்பனையகங்கள், மருத்துவம், சுகாதாரம், எண்ணெய், எரிவாயு உற்பத்தி, ஆழ்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் என தலைசிறந்த நிறுவனங்களாகத் திகழும் பல நிறுவனங்களுக்கு சேவையாற்றிவருகிறது.

ஆப்வியூஎக்ஸ் நிறுவனத்தை பற்றி ஆனந்த் புருஷோத்தமன் விவரிக்கிறார்

இது குறித்து புருஷோத்தமன் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தியாவில் விற்பனை, வாடிக்கையாளர்களுக்கான விநியோகம் இவற்றை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் முழுமையான தகவல் தொழில்நுட்ப தானியங்கி தளத்தை புதுமையான முறையில் வழங்கவுள்ளதாகவும், வரும் இரண்டு ஆண்டுகளில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆப்வியூஎக்ஸ்யை பயன்படுத்தி வேலையை விரைவில் முடிக்கலாம்

தொடர்ந்து பேசிய அவர், ஆண்டுக்கு ஆண்டு நூறு சதவிகித வளர்ச்சியை எட்ட இலக்கு உள்ளதாகவும் அதன் பொருட்டு முக்கிய நகரங்களான சென்னை,பெங்களூரு,கோவையில் ஆப்வியூஎக்ஸ் விரிவாக்கத்தை விரைவில் தொடங்க உள்ளதாகவும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஆப்வியூஎக்ஸ் மூலம் 600-க்கும் மேற்பட்டோர்க்கு வேலை வழங்கத் திட்டம்


இதையும் படிங்க: மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவிகிதமாகக் குறைய வாய்ப்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details