கோயம்புத்தூர்:தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு, திருவள்ளுவர் திருநாளில் ‘டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள்’ வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக, அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், பட்டியலின முன்னேற்றத்திற்கு சேவை செய்பவருக்கு டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படுகிறது.
எனவே, பட்டியலின முன்னேற்றத்திற்கு சேவை செய்து, தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதனை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் ‘டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது’ ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், தமிழ் வளர்ச்சிக்கு பாடுப்பட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கும் திருவள்ளுவர் திருநாளில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.