உலக அளவில் இரு சக்கர வாகன தயாரிப்பில் டிவிஎஸ் நிறுவனம் சிறந்து விளங்கி வருகிறது. அந்த வகையில், அந்த நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 310 ரக புதிய வாகனத்தின் அறிமுக விழா கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.
டிவிஎஸ் மோட்டார்ஸின் புதிய ரக அப்பாச்சி அறிமுகம்! - அப்பாச்சி ஆர்டிஆர் 310 அறிமுக விழா
கோவை: டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 310 ரக பைக் கோவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
அதிக சிரமம் இல்லாமல் வெகு சுலபமாக கியரை மாற்ற உதவுவதோடு, வெகு வேகமாக பயணிக்கும் போதும் சாலையோரங்களில் திரும்பும்போதும் வேகத்தை குறைக்க வேண்டிய சூழ்நிலையில் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் ஓட்ட உதவும் என்பதும் இந்த வாகனத்தின் சிறப்பம்சமாகும்.
இந்த வாகனத்தை அறிமுகம் செய்து வைத்துவிட்டு பேசிய தலைமை செயல் அதிகாரி ராதாகிருஷ்ணன், “இந்த புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 310 வாகனம் வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை குறைவான கட்டணத்தில் வழங்கிடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இந்த புதிய தொழில்நுட்பத்தில் உரிமையாளர். ஸ்பீடு கியர்பாக்ஸ் டபுள் லிக்விட் கூல்டு எஞ்சின் வெர்ட்டிகல் ஸ்பிடோ மீட்டர் ஹெட்லேம்ப் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களுடன் ரேஸிங் சிகப்பு, கருப்பு ஆகிய இரு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் விலை 2 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.