கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியாரின் முழு உருவச் சிலை மீது சமூகவிரோதிகள் சிலர் காவி பெயிண்ட்டை ஊற்றியுள்ளனர். சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றப்பட்டிருப்பதைக் காலையில் பார்த்த அப்பகுதியினர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு ஒருவரை கைது செய்தனர்
இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அனைத்து அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தந்தை பெரியார் சிலையின் மீது இதுபோன்ற செயல்களை செய்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். இதுபோன்ற கண்டனத்திற்குரிய செயல் வேலை செய்பவர்களை அரசு விட்டு வைக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.