கோவை:தீபாவளிப் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேற்றிரவு லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி திவ்யா தலைமையிலான 5 அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இரண்டாவது நாளாக தொடரும் சோதனை
இந்த விசாரணை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகின்றது. இச்சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உதவி இயக்குநர் சூர்யாவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, கரூரில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.62,000 பணம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை