கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அதனால் மக்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்குவதற்கு பேருந்து நிலையம், பள்ளி மைதானங்கள் போன்ற இடங்களில் சந்தைகளை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது.
அதிலும் பாதுகாப்பான முறையில் நடைபெறும் வகையில் சமூக இடைவெளி விட்டு நின்று வாங்கிச் செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படியே கோவையில் பல இடங்களில் செயல்பட்டு வரும் சந்தைகளில் மக்கள் இடைவெளி விட்டு நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
அப்படி இருக்க கோவை அன்னூர் பகுதியில் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தில் மக்கள் அரசு கூறிய சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாய் நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றதால் அன்னூர் வட்டாட்சியர் சாந்தா சந்தையை கலைக்குமாறு உத்தரவிட்டார். அதனால் அந்தச் சந்தை பாதியிலேயே கலைக்கப்பட்டது.
சந்தையை கலைத்த வட்டாட்சியர் அப்பகுதியைச் சுற்றி 20 கிலோமீட்டர் அளவில் வசிக்கும் மக்கள் அந்த காய்கறி சந்தையை நம்பியுள்ளனர். தற்பொழுது பாதியிலேயே அந்தச் சந்தை அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் காய்கறிகளை வாங்காமல் வீடு திரும்பினர்.
இதையும் படிங்க: ஆட்டை கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தை - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி!