தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அன்னூர் பைனான்சியர் கொலை விவகாரத்தில் திருப்பம்: இந்து முன்னணி நிர்வாகி கைது - கோவை மாவட்டம் அன்னூரில் பைனான்சியர் வெட்டி கொலை

கோவை மாவட்டம் அன்னூரில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்து முன்னணி நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்து முன்னணி நிர்வாகி கைது
இந்து முன்னணி நிர்வாகி கைது

By

Published : Jan 29, 2022, 12:56 PM IST

கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நாகம்மாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவண சுந்தரம். இவர், இந்து முன்னணி நிர்வாகியாகியான குட்டி என்கிற ராஜேந்திரன் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

அண்மையில் அவரிடம் இருந்து பிரிந்து சென்று சரவண சுந்தரம் தனியாக நிதி நிறுவனம் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இதையடுத்து தமிழ்செல்வன் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நிதி நிறுவனத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பணம் பெற்றுக் கொண்டு தமிழ்செல்வன் பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடிப்பு செய்ததால் சரவண சுந்தரத்திற்கும் தமிழ்செல்வனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மேலும் 2 பேர் கைது

கடந்த (ஜன.27) வியாழக்கிழமை தமிழ்செல்வன், தனது நண்பர் ராஜராஜனுடன் சேர்ந்து சரவண சுந்தரத்தை வெட்டி கொலை செய்து, இருவரும் அன்னூர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அதன்பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்விவகாரத்தில் திருப்பமாக, இந்த கொலையை இந்து முன்னணி நிர்வாகி குட்டி என்கிற ராஜேந்திரன் தான் திட்டமிட்டு அரங்கேற்றியதாக உயிரிழந்த சரவண சுந்தரத்தின் உறவினர்கள் அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், ராஜேந்திரன் மற்றும் ரங்கநாதன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

அன்னூர் பகுதியில் தலைமறைவாகி இருந்த இருவரையும் காவல்துறையினர் நேற்று இரவு (ஜன.28) கைது செய்தனர். இருவர் மீதும் கொலை வழக்கு, கூட்டுசதி செய்தல் என இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை ஜாதி ரீதியான கலவரம்:கள ஆய்வு வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details