தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் அணிவகுப்புடன் நிறைவடைந்த காவலர்களுக்கான வருடாந்திர கவாத்து பயிற்சி!

கோவையில் ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி, நேற்று முடிவடைந்தது.

காவலர்களுக்கான வருடாந்திர கவாத்து பயிற்சி
காவலர்களுக்கான வருடாந்திர கவாத்து பயிற்சி

By

Published : Dec 28, 2022, 3:15 PM IST

காவலர்களுக்கான வருடாந்திர கவாத்து பயிற்சி

கோயம்புத்தூர்: மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு, கடந்த 9ஆம் தேதி முதல் நேற்று வரை வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி, காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நவீன ஆயுதங்களைக் கையாளுதல், கண்ணீர் புகை குண்டுகளை கையாளுதல், கலகக் கூட்டத்தை கலைத்தல், அணிவகுப்பு கவாத்து, பாதுகாப்புப் பணிகள், மன நலம் மற்றும் உடல் நலத்தைப் பேணுதல், ஆரோக்கியமான உணவு முறை போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் சுமார் 550 மாநகர போலீசார் பயிற்சி பெற்றனர்.

இந்நிலையில் பயிற்சியின் நிறைவுநாளான நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற அலங்கார அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, அணிவகுப்பு கவாத்தினை பார்வையிட்டார். மேலும் இதில் மாநகர காவல் துறையில் பயன்பாட்டில் இருந்து வரும் அனைத்து காவல் வாகனங்களையும் ஆய்வு செய்து ஆயுதப்படை காவலர்களுக்கும், காவல் வாகன ஓட்டுநர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து காவலர்களிடம் தேவைகளைக் கேட்டறிந்தார். அப்போது காவலர்கள் முன்வைத்த பல்வேறு தேவைகளைக் கேட்ட காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஆயுதப்படை காவல்துறை துணை ஆணையர் முரளிதரன், காவல் உதவி ஆணையர் சேகர், காவல் ஆய்வாளர்கள் கோவிந்தராஜு, பிரதாப் சிங் மற்றும் காவல் ஆளிநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:TN Police 2022 roundup: தமிழ்நாடு காவல்துறைக்கு எப்படி அமைந்தது?

ABOUT THE AUTHOR

...view details