கோயம்புத்தூர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 30ஆம் தேதி அமெரிக்காவுக்கு சென்றார். தனது மேல்படிப்பிற்காக 12 நாட்கள் அவர் அமெரிக்காவில் தங்கி இருந்தார். அப்போது இந்தியர்கள் பலரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு சென்ற அண்ணாமலை நேற்றைய (அக்.14) தினம் நாடு திரும்பினார். இதனிடையே, அவர் நாடு திரும்பி உள்ள நிலையில், அவரை வரவேற்கும் விதமாக கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் ஆளுயர போஸ்டர்கள் ஒட்டப்படுள்ளன.
அதில், அண்ணாமலையின் படத்திற்கு கீழ் "உலகம் போற்றும் தலைவன் வருக, வருக வெல்க, வெல்க" என அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் கோவை மாநகரின் முக்கிய இடங்களான ரயில் நிலையம், உக்கடம், லங்கா கார்னர் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. அதே சமயம், இந்த ஆளுயர போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் சுவர் மட்டுமல்லாது தரைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.