தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: அதிமுகவினர் பேரணியாக சென்று மரியாதை! - மாலை அணிவித்து மரியாதை

கோவையில் பேரறிஞர் அண்ணாவின் நினைவுதினத்தை முன்னிட்டு எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் பேரணியாக சென்று மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: அதிமுகவினர் பேரணியாக சென்று மரியாதை
பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: அதிமுகவினர் பேரணியாக சென்று மரியாதை

By

Published : Feb 3, 2023, 3:08 PM IST

கோவை: பேரறிஞர் அண்ணாவின் 54-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் அவிநாசி சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் இதய தெய்வம் மாளிகையில் இருந்து பேரணியாக சென்று அண்ணாவின் சிலைக்கும் அருகில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இதய தெய்வம் மாளிகையில் உள்ள அண்ணாவின் புகைப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: அதிமுகவினர் பேரணியாக சென்று மரியாதை

இந்நிகழ்வில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே. அர்ஜூனன், கந்தசாமி, பி.ஆர்.ஜி.அருண்குமார், ஜே.ஆர்.ஜெயராம் உட்பட கோவை மாவட்ட அதிமுகவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இனி போஸ்டர் தொல்லை இல்லை.! போஸ்டரை ஒழிக்கும் விதமாக அழகிய ஓவியங்கள்..

ABOUT THE AUTHOR

...view details