இலங்கையைச் சேர்ந்த நிழலுலக தாதா அங்கோடா லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் குற்றப்பிரிவு - குற்றப்புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) மதுரையில் கடந்த இரண்டு நாள்களாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில், அங்கோடா லொக்கா மதுரையில் தங்கியிருந்த பல்வேறு வீடுகள், தொடர்புள்ள இடங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று (ஆக. 6) மதுரை கூடல் நகர் அருகே உள்ள ரயிலார் நகர் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். இதன்பின்னர் கைது செய்யப்பட்ட சிவகாமி சுந்தரியின் முன்னாள் கணவர் வினோத் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், சினிமாவில் நடிக்க ஆசை இருப்பதாகக் கூறி, மதுரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில், கடந்த ஜனவரி மாதம் இறுதியில் லொக்கா தனது மூக்கை அறுவை சிகிச்சை செய்தது, சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.