தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பள்ளியைச்சார்ந்த நாங்களும் சளைத்தவர்கள் அல்ல - அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

தனியார் கல்வி நிறுவனத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு பள்ளியைச் சார்ந்த நாங்களும் சளைத்தவர்கள் இல்லை எனப் பெருமிதம் கொண்டார்.

அரசு பள்ளியை சார்ந்த நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என அன்பில் மகேஷ் பெருமிதம்
அரசு பள்ளியை சார்ந்த நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என அன்பில் மகேஷ் பெருமிதம்

By

Published : Nov 8, 2022, 4:07 PM IST

கோவை: பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரி(தனியார்) வளாகத்தில் ரத்தினம் கல்வி நிறுவனங்களின் 50ஆவது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்டத்திலிருந்து உருவான 10 பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ”கல்வித்துறையில் சமச்சீர் துவங்கி பல்வேறு முன்னெடுப்புகளை தற்போதைய அரசு எடுத்து வருகிறது.

பள்ளிக்கல்வி துவங்கி, உயர் கல்வி வரை வளர்ச்சிக்கான ஏற்பாடுகளை தற்போதைய அரசு செய்து வருகிறது. தற்போதைய இளைஞர்கள் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பயன்படும் விதத்தில் உருவாகி வருகிறார்கள். இளைஞர்களின் படிப்பிற்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவது தான் திராவிட மாடல் சித்தாந்தம்.

உங்களுக்கான முதலமைச்சராக தற்போதைய முதலமைச்சர் இருக்கிறார். அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளமாய் திகழ்கிறது’ என்றார். இந்த நிகழ்வில் தனியார் பள்ளியின் சிபிஎஸ்சி பாடத்தைப் பற்றி குறிப்பிட்ட அமைச்சர், 'அரசுப் பள்ளிகளை சார்ந்த நாங்களும் சளைத்தவர்கள் அல்ல’ என பெருமிதத்துடன் கூறினார். இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் அக்கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளியைச் சார்ந்த நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

இதையும் படிங்க:போட்டிக்கு தயாராகும் ஓபிஎஸ்.. ஈபிஎஸ் அணியின் அடுத்த பிளான்?

ABOUT THE AUTHOR

...view details