கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் 958 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், புலி, சிறுத்தை புலி, யானை உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் உள்ளன. ஆண்டுதோறும் மே மாதம், கோடைகால விலங்குகள் கணக்கெடுப்பும், டிசம்பர் மாதம் குளிர்கால விலங்குகள் கண்டெடுப்பும் நடத்தபட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான குளிர்கால விலங்குகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கி ஆறு நாள்கள் நடைபெறுகிறது. இதில், ஆனைமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், மானம்பள்ளி உள்ளிட்ட ஆறு வனசரகங்களில் இன்று தொடங்கிய கணக்கெடுப்பில், 64 நேர்கோடு பாதைகள் அமைக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.