கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலை ஆனைக்கட்டி பகுதியில் உள்ள கண்டிவளி சாலை கடல் அரிசி மலையில் மாலை நான்கு மணியளவில் சிறியதாகப் பற்றிய காட்டுத்தீ ஏழு மணிக்குள் மளமளவென அதிகளவில் பரவியது.
சுமார் மூன்று கிலோமீட்டர் சுற்றளவுக்குப் பரவியுள்ள இந்தத் தீயினால் அங்குள்ள அரியவகை மரங்கள், உயிரினங்கள் தீயில் கருகிவருகின்றன.
ஆனைக்கட்டியில் காட்டுத் தீ அப்பகுதி வனத்துறையினர் தீயை அணைத்துவரும் நிலையில், கோவை வனச்சரகத்தினர் விரைந்து தீயை அணைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ளதால், அருகிலிருக்கும் கிராமத்தினர் வனப்பகுதிக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மர்ம நபர்கள் தீ வைத்ததால் பற்றி எரியும் நேக்னாமலை