தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 2, 2022, 9:37 PM IST

ETV Bharat / state

மாரியம்மன் கோயிலில் கட்டப்பட்டிருந்த வாழை மரங்களைப் பசியாற சாப்பிட்டுச் சென்ற யானைகள்

கோவை அருகே அதிகாலையில் கோயிலுக்கு வந்த இரண்டு யானைகள் திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த வாழை மரங்களை சாப்பிட்டுச் சென்றுள்ளது.

மாரியம்மன் கோவிலில் கட்டப்பட்டிருந்த வாழை மரங்களை பசி ஆற சாப்பிட்டு சென்ற யானை
மாரியம்மன் கோவிலில் கட்டப்பட்டிருந்த வாழை மரங்களை பசி ஆற சாப்பிட்டு சென்ற யானை

கோவை:மாங்கரை அருகே உள்ள வீரபாண்டி, தடாகம், பெரிய தடாகம் ஆகிய கிராமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நாள்தோறும் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து வாழை உள்ளிட்டப் பயிர்களை சாப்பிடுவது வழக்கம்.

இந்நிலையில் சின்ன தடாகம் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக அங்குள்ள மாரியம்மன் கோயிலில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சின்ன தடாகம் கிராமத்திற்குள் வந்த தாய் மற்றும் குட்டி யானை இரண்டும் மாரியம்மன் கோயிலில் கட்டப்பட்டிருந்த வாழை மரங்களையும் தேங்காய்களையும் சாப்பிட்டுச்சென்றது. இதனை அங்குள்ளவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:குன்னூர் அருகே இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம் - கிராம மக்கள் அச்சம்!

ABOUT THE AUTHOR

...view details