தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எல்லையில் உடல்நலம் பாதித்த நிலையில் நிற்கும் யானையினை வேடிக்கை பார்க்கும் இரு மாநில வனத்துறை - எல்லையில் உடல்நலக்குறைவில் நிற்கும் யானை

கோவை அருகே தமிழ்நாடு - கேரள எல்லையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆற்றின் நடுவே யானை நின்றுகொண்டிருந்த நிலையில், யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினரும் வேடிக்கை பார்த்து வரும் சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லையில் உடல்நலம் பாதித்த நிலையில் நிற்கும் யானை..!, வேடிக்கை பார்க்கும் இரு மாநில வனத்துறை
எல்லையில் உடல்நலம் பாதித்த நிலையில் நிற்கும் யானை..!, வேடிக்கை பார்க்கும் இரு மாநில வனத்துறை

By

Published : Aug 15, 2022, 10:26 PM IST

கோவை:கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள ஆனைகட்டி பகுதியில் 70% வனப்பகுதி இருப்பதால் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகளின் வலசை பாதையில் முக்கியப்பங்கு வைக்கும் ஆனைகட்டி வனப்பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும்.

இந்நிலையில், ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் தமிழ்நாடு - கேரள மாநிலங்களைப் பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் நடுவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நின்று கொண்டிருகக்கிறது.

நேற்று(ஆக.14) மாலை முதல் இந்த யானை ஆற்றில் நின்று கொண்டிருப்பதால் இதற்கு யார் சிகிச்சை அளிப்பது..? என இரு மாநில வனத்துறையினர் யோசனை செய்து வருகின்றனர். அதே சமயம் கேரள வனப்பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் கேரள வனத்துறையும் தமிழ்நாடு வனப்பகுதிக்குள் வந்துவிடாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு வனத்துறையினரும் நிற்பதால் யானை எந்தப்பகுதிக்குச்செல்வது எனத்தெரியாமல் ஆற்றின் நடுவில் பல மணி நேரமாக நின்று கொண்டிருக்கிறது.

இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், “உடனடியாக தமிழ்நாடு வனத்துறையினர் இந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும். கேரள வனத்துறையினர் நேற்று முதல் வேடிக்கை பார்த்துக்கொண்டு வருகின்றனர். அவர்கள் யானைக்கு சிகிச்சை அளிப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் யானையைக் காப்பாற்ற தமிழ்நாடு வனத்துறையினர் முன் வர வேண்டும்” எனக்கோரிக்கை எடுத்துள்ளனர்.

வழக்கமாக காவல்துறையில் எல்லை பிரச்னை இருந்து வரும் நிலையில் வனத்துறையின் எல்லைப்பிரச்னையால் யானைக்கு சிகிச்சை அளிக்க தமிழ்நாடு கேரள வனத்துறையினர் யோசனை செய்து வருவது சூழலியல் ஆர்வலர்களிடமும், பொதுமக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லையில் உடல்நலம் பாதித்த நிலையில் நிற்கும் யானை..!, வேடிக்கை பார்க்கும் இரு மாநில வனத்துறை

இதையும் படிங்க: ஈஷாவின் மண் வளம் காப்போம் திட்டத்தை பாராட்டிய காமன்வெல்த் பொதுச் செயலாளர்

ABOUT THE AUTHOR

...view details