கோயம்புத்தூரில் திமுக நீலகிரி மாவட்ட தலைவரும் வழக்கறிஞருமான அருள்மொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”கோயம்புத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக கழக நிர்வாகிகள் சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் மீது மக்களிடையே அவதூறான செய்திகளை பரப்பி வருகிறார்.
இதுகுறித்து அம்மன் அர்ஜுனன் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளது அனைத்தும் பொய்யானது. எவ்வித ஆதாரமும் இல்லாது. எனவே இதற்கான பதில் இருக்கிறது. நான் தாக்கல் செய்துள்ளேன் அதில் முழு விவரங்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திமுகவினர் மீது அவதூறு பரப்பும் அம்மன் அர்ஜுனன் - திமுக வழக்கறிஞர்கள் சங்கம்
கோயம்புத்தூர்: சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் திமுகவினர் மீது மக்களிடையே பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என அருள்மொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
![திமுகவினர் மீது அவதூறு பரப்பும் அம்மன் அர்ஜுனன் அருள்மொழி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:20:48:1593165048-tn-cbe-02-dmk-lawyer-meet-visu-tn10027-26062020125619-2606f-00903-239.jpg)
அருள்மொழி
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பாராட்டுகளை பெறுவதற்காகவே அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இது போன்ற செயல்களை மேற்கொண்டால் திமுக சார்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை அம்மன் அர்ஜுனன் மீது எடுக்கப்படும்” என்றார்.