கோயம்புத்தூர்:அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு சோதனை கிடங்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் நேற்று (செப்.24) இரவு திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், தீயணைப்பு துறையினர் வருவதற்கு முன்பு ஆம்புலன்ஸின் முன் புறம் முற்றிலும் எரிந்து சேதமானது. நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இயந்திர கோளாறு காரணமாக தீ பற்றி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.