தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் மோதி உயிரிழந்த நண்பர்கள்!

கோவை: இருசக்கர வாகனம் மீது 108 ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதியதில் நண்பர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

108 ambulance accident

By

Published : Nov 3, 2019, 11:56 PM IST

கோவை மாவட்டம் சூலூர் அருகே மதியழகன் நகரைச் சேர்ந்தவர் விக்ரம். இவரது நண்பர் சதீஷ்குமார்.

பெயிண்டிங் தொழிலாளிகளான இவர்கள் வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு நேற்றிரவு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, சூலூர் பேருந்து நிலையம் எதிரே திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த 108 ஆம்புலன்ஸ், இருவரும் சென்ற இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.

அப்போது, தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, இருவரது உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதைபோல், 108 ஆம்புலன்சில் வந்த நோயாளியையும் கோவை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் மோதி நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் மதியழகன் நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிங்க : 'Act East Policy-யின் மையமாக ஆசியன் கூட்டமைப்பு விளங்குகிறது' - மோடி

ABOUT THE AUTHOR

...view details