கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே சட்ட விரோதமாகத் திமிங்கிலத்தின் எச்சத்தை (அம்பர்கிரிஸ்) விற்பனை செய்ய உள்ளதாகத் திருப்பூர் வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவை வனத்துறையினர் மற்றும் திருப்பூர் வனத்துறையினர் இணைந்து வாகராயன்பாளையத்தில் உள்ள இளங்கோவன் என்பவரது வீட்டில் சோதனையிட்டனர்.
அப்போது அம்பர்கிரிஸ் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சுமார் 6 லட்சம் மதிப்புடைய 3 கிலோ அம்பர்கிரிஸை பறிமுதல் செய்து வனத்துறையினர் இளங்கோவனை கைது செய்தனர்.
இதனையடுத்து அவரை கோவை கோவை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கேரளாவில் உள்ள ஒருவரிடம் இருந்து இந்த அம்பர்கிரிஸை வாங்கியதாகவும். இதனைச் சென்னையில் விற்க முயன்ற போது விற்பனை செய்ய முடியாததால் இடைத்தரகர்கள் மூலம் கோவையில் விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.