கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே அனைத்து ஊழியர் சங்கத்தினர் இன்று (அக்.1) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியில் பி.எஸ்.என்.எல்., முன்பு அனைத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! - pollachi bsnl office protest
கோவை: பொள்ளாச்சியில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து அனைத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் தங்கமணி தலைமை தாங்கினார். அப்போது, “பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை வழங்காமல் மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவன வளர்ச்சியை தடுக்க திட்டமிட்டு செயல்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிர்வகிக்கும் நிர்வாகத்தை எதிர்ப்பு காட்டும் விதமாக இன்று கருப்பு தினத்தை கடைபிடிக்கிறோம். மத்தியில் ஆளும் மோடி அரசு தொடர்ந்து ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுத்து பணியிலிருந்து விடுவிக்க முயற்சி செய்கிறது” என குற்றஞ்சாட்டினார்கள்.