கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியாறு அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் மழை நீர் ஆழியாறு அணைக்கு வருகிறது.
101 அடியை எட்டிய ஆழியாறு அணை - விவசாயிகள் மகிழ்ச்சி! - Coimbatore aazhiyar dam
கோயம்புத்தூர் : பொள்ளாச்சி ஆழியாறு அணை விரைவில் நிரம்ப உள்ளதாக தமிழ்நாடு பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
![101 அடியை எட்டிய ஆழியாறு அணை - விவசாயிகள் மகிழ்ச்சி! Aliyar dam water level increased](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-vlcsnap-2020-08-12-21h05m04s941-1208newsroom-1597246630-230.jpg)
101 அடியை எட்டியுள்ள ஆழியாறு அணை - விவசாயிகள் மகிழ்ச்சி!
கடந்த சில தினங்களாக அந்த பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் 22 அடிக்கு மேல் உயர்ந்து 101.10 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து நிமிடத்திற்கு 1640 கனஅடி வீதம் உள்ளது. அதேபோல 103 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மழை தீவிரமடைந்தால் அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியை எட்டும் என பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட நாள்களுக்கு பிறகு ஆழியாறு அணையில் நீர் நிரம்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.