கோவை: தமிழ்நாடு முழுவதும் இன்று இறுதிகட்ட பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் ஒருபுறம், அவர்களது ஆதரவாளர்கள் ஒருபுறம் என்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவை தெற்குச் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் கமல் ஹாசனுக்கு ஆதரவாக அவரது மகள் அக்சரா ஹாசன், அவரது அண்ணன் மகள் சுஹாசினி ஆகியோர் இன்று(ஏப்.4) காந்திபுரம் ராம்நகர் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.