தமிழ்நாடு - கேரள எல்லை பகுதியான கோவை மாவட்டம், அட்டப்பாடி அருகே சமீபத்தில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த மணிவாசகம், கார்த்தி, ஸ்ரீமதி, சுரேஷ் ஆகிய நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உட்பட 6 துப்பாக்கிகள், லேப்டாப் எனப் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது மாவோயிஸ்ட் கூட்டாளிகளான தீபக், சோனா, லட்சுமி ஆகிய மூன்று பேர் தப்பிச் சென்றனர்.
இதில் தப்பிச் சென்ற மாவோயிஸ்ட் தீபக் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் ஆவார். இவர்களை கேரள மாநில தண்டர் போல்ட் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் மாவோயிஸ்ட் தீபக் இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாவோயிஸ்ட் தீபக் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
துப்பாக்கி பயிற்சி எடுக்கும் மாவோயிஸ்ட் தீபக் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவ்களில் இருந்து இந்த புகைப்படம் , வீடியோ காட்சிகள் கைப்பற்றப்பட்டதாக காவல் துறை சார்பில் கூறப்படுகிறது. இது குறித்து இருமாநில காவல் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாவோயிஸ்ட் மணிவாசகம் யார்? - பின்னணித் தகவல்கள்...