தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'Money..Money..Money' ரூபாய் நோட்டு வடிவில் டிக்கெட்.! கலக்கும் அஜித் ரசிகர்கள்.. - அஜித்

ரூபாய் நோட்டு வடிவில் துணிவு படத்திற்கு டிக்கெட் தயாரித்து பொள்ளாச்சி அஜித் ரசிகர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.

ரூபாய் நோட்டு வடிவில் டிக்கெட்
ரூபாய் நோட்டு வடிவில் டிக்கெட்

By

Published : Jan 8, 2023, 1:36 PM IST

ரூபாய் நோட்டு வடிவில் டிக்கெட்

பொள்ளாச்சி:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டை அஜித் ரசிகர்கள் பல்வேறு விதமாக பிரபலப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், துணிவு படத்தை கொண்டாடும் விதத்திலும், மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணமும், பொள்ளாச்சி அஜித் ரசிகர்கள், ரூபாய் நோட்டு வடிவில் துணிவு படத்திற்கு டிக்கெட் தயாரித்து விநியோகம் செய்து வருகின்றனர்.

இந்த ரூபாய் நோட்டு டிக்கெட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி அஜித் ரசிகர்கள் சார்பில் பேசிய சின்ராஜ் சதீஷ், “பொள்ளாச்சி அஜித் ரசிகர்கள் சார்பாக உலக முழுவதும் உள்ள அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள். ஒரு டிக்கெட் மூலமாக நாங்கள் ஃபேமஸ் ஆயிட்டோம். நாங்கள் இது மட்டுமின்றி, பல்வேறு நலதிட்ட உதவிகள் செய்து வருகிறோம். இதை கைவிடாமல் தொடர்ந்து நடத்துவோம். இதே போல் அஜித் ரசிகர்கள் அனைவரும் உதவிகள் செய்யுங்கள். துணிவு வெற்றி பெற உலக அஜித் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாரிசு படம் வெற்றி அடைய 108 தோப்புக்கரணம் போட்ட விஜய் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details