ஏர்மேன் பணிகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ள தகவல்கள் பின்வருமாறு
- தேர்வு நடைபெறும் இடம் : கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் உடற்கல்வித்துறை உள்அரங்கம்
- தேர்வு நடைபறும் நாள்: அக்டோபர் 17, 21ஆம் தேதி
- அக்டோபர் 17ஆம் தேதியில் கலந்துகொள்ளவேண்டியவர்கள்: தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார்
- அக்டோபர் 21ஆம் தேதியில் கலந்துகொள்ளவேண்டியவர்கள்: கேரளா, லட்சத்தீவு
- வயதுவரம்பு: ஜூலை 19, 1995 முதல் ஜூலை 1, 2000-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும் (இளநிலை பட்டம் பெற்றவர்), ஜூலை 19, 1992 முதல் ஜூலை 1, 2000-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும் (முதுநிலை பட்டம் பெற்றவர்)
- இளநிலை கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிஏ, பிஎஸ்சி, பிசிஏ பட்டம், 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எட். பட்டம்
- முதுநிலை கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் எம்ஏ ஆங்கிலம்/உளவியல், எம்.எஸ்சி., எம்சிஏ பட்டம், 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எட். பட்டம்
- விவரங்களுக்கு: CENTRAL AIRMEN SELECTION BOARD