அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து கடந்த ஜூன் 3ஆம் தேதி கிளம்பிய ஏ.என். 32 ரக விமானம் 13 விமானப்படை வீரர்களுடன் அருணாச்சலப் பிரதேச வனப்பகுதியில் விபத்திற்குள்ளானது. நீண்ட தேடுதல் பணிக்கு பின்னர் 13 பேரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டன.
ஏஎன் 32 விமான விபத்து: சொந்த ஊருக்கு வந்த கோவை வீரர் உடல்! - கோவை
கோவை: அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர் வினோத்தின் உடல், அவரது சொந்த ஊருக்கு வந்தடைந்தது.
ஏஎன் 32 விமான விபத்து: கோவை வீரர் உடல் சொந்த ஊருக்கு வந்தடைந்தது!
இந்த விமான விபத்தில் உயிரிழந்த கோவையைச் சேர்ந்த வினோத் உடல் சூலூர் விமான படைத்தளத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தற்போது சிங்காநல்லூரில் உள்ள வினோத்தின் இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்த பின்னர் 12 மணி அளவில் தகனம் செய்யப்பட இருக்கின்றது.