கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு அதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "எம்ஜிஆர், ஜெயலலிதா வழிநடத்தி வந்த அதிமுக, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஆளும் கட்சியாக உள்ளது. அதிமுகவின் ஓட்டு வங்கி எத்தனை தேர்தல் வந்தாலும் குறையாது.